மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

Webdunia

திங்கள், 24 செப்டம்பர் 2007 (16:33 IST)
இன்று மேட்டூரஅணைக்கநீரவரத்து குறைந்ததாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்பொழுது மழை குறைந்து வருவதால் நீர் வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 12,031 கன அடி தண்ணீர் வருகின்றது. அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 20, 000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பாசனத்திற்கு திறந்துவிடும் தண்ணீர் அளவு குறைக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பில் உள்ளது. இன்று காலையில் நீர் மட்டம் 119.2 அடியாக இருந்தது. அணையின் முழு நீர்மட்டம் 120 அடியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்