விவசாயத்திற்கு தினமும் 6 மணி நேரம் மின் வினியோகம் தேவை

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (18:43 IST)
திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆசீஷ்வச்சானி தலைமையில், விவசாயிகள், மின் அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு, ராஜா சிதம்பரம், சிவசூரியன், மாசிலாமணி, கணேசன் ஆகியோர் பேசும் போது மின் உற்பத்தி குறைந்துவிட்டது. அதனால் தான் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்து வந்ததாகவும், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 6 மணி நேரம் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின்சார விநியோகம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்கையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் விவசாய பம்பு செட்டுகளுக்கு மாதக் கணக்கில் மின் இணைப்பு தாரததையும் சுட்டிக் காட்டப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்