கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கபினியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால்,அங்குள்ள கபினி,கிருஷ்ணராஜ சாகர், உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது.
நேற்று மாலை நிலவரப்படி, கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 896 கன அடியில் இருந்து 2,300 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அங்குள்ள அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கபினி, கிருஷ்ண சாகர் அணையின் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 90 அடியை எட்டினால், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.