மனித, மிருக திடக்கழிவுகளில் இருந்து உயிரி உரம் கண்டுபிடிக்க அரசு திட்டம் :

இந்தியாவின் நகரப் பகுதிகளில் வெளியேற்றப்படும் மனித, விலங்கு திடக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரவு கேட்டுக் கொண்டுள்ளார்.

மும்பைக்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டுள்ள அமோனியா --1 ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை துவக்கி வைக்க, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வந்துள்ளார்.

350 மெட்ரிக் டன் உற்பத்தி திறன்கொண்ட இந்த அமோனியா தொழிற்சாலை 1965 ல் அமைக்கப்பட்டது. தற்பொழுது 98 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு செய்யப்பட்டு இயங்கும் நிலையில் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்த அமைச்சர் சுரேஷ் பிரபு, செய்தியாளர்களிடம் பேசினார்.

உரத் தொழிற்சாலைகள், தங்களுடைய உரத் தயாரிப்பு குறித்த ஆராய்ச்சி செய்வதலிருந்து, மனித மற்றும் விலங்கின திடக் கழிவுகளில் இருந்து இயற்கை மற்றும் உயிரி உரம் தயாரிக்கும் ஆராயச்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நமது நாட்டில் நகரப் பகுதிகளில் வெளியேற்றப்படும் மனித, விலங்கின திடக்கழிவுகளை உர மாற்றம் செய்வதால் மட்டுமே, நமது நாட்டின் உரத்தேவைகளை தீர்க்க முடியும் என்று கூறினார்.

இந்தியாவின் உர உற்பத்தி தற்பொழுது 200 பில்லியன் டன்களாக உள்ளது. இதனை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமெனில் இயற்கை சார் உயிரி உரத் தயாரிப்பில் (Organic and BIO Fertilizers) நாம் ஈடுபட்டே தீர வேண்டும் என சுரேஷ் பிரபு கூறினார்.

இயற்கை சார் உயிரி உரத்தயாரிப்பை மேம்படுத்த முனைப்புக் குழு ஒன்றை உர அமைச்சகம் எற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உள்ள உரத் தொழிற்சாலைகளில் இயங்கும் ஆராயச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆய்வகங்களை இக்குழு ஆராயும் -அதனடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உத்திகள் மேம்படுத்தப்படும் என்றும் பிரபு கூறினார்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி பேரவையுடன் இணைந்து மத்திய முனைப்புக்குழு செயல்படுகிறது.

இந்திய அரசு மேற்கொள்ள இருக்கும் புதிய உரக் கொள்கையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்