ஆசிரியர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?

Webdunia

செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (17:06 IST)
ஆசிரியர் தினத்தை பள்ளி மற்றும் கல்லூரிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடுவர்.

சுதந்திர தினம், குடியரசு தினம் என எல்லா நிகழ்ச்சிகளிலும் மாணவ, மாணவியரே பங்கேற்பர்.

ஆனால் ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தை மாணாக்கர்கள் சிந்தித்து வித்தியாசத்தை புகுத்தி சிறப்பாகக் கொண்டாடலாமே.

* ஆசிரியர்களும் உங்களுடன் நடனமாடும் விதத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம்.

* ஆசிரியர்களிடம் உங்களது எதிர்பார்ப்புகளை உணர்த்தும் வகையில் பேச்சுப்போட்டிகள்.

* ஆசிரியர்கள் பங்கேற்றுப் பரிசுப் பொருட்களைப் பெறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள்.

* ஆசிரியர்களுக்கான கேள்வி-பதில் போட்டிகள்.

* ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்த குழுக்களுக்கு இடையிலான போட்டிகள்.

* ஒவ்வொரு ஆசிரியர்களும் தனித்தனி திறனைக் கொண்டிருப்பர். அதை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள்.

* உங்கள் ஆசிரியரைப் பற்றி என்ற தலைப்பில்.... ஆசிரியரைப் பற்றி மற்றவர்கள் அறியாத சில தகவல்கள் (அவரது படைப்பு, தனித் திறன், விருப்பம்) போன்றவற்றை கண்டறிந்து விவரிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்