பி.எஸ்.என்.எல். இல் டெலிகாம் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் வேலை வாய்ப்பு!
புதன், 5 நவம்பர் 2008 (12:50 IST)
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சென்னை, செங்கல்பட்டு பிரிவில் டெலிகாம் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் (Telecom Technical Assistant) பதவிக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை பிரிவில் மொத்தம் 122 பதவிகளும் (UR-60, OBC-34, SC-24. PH-04), செங்கல்பட்டு எஸ்.எஸ்.ஏ. வில் (Secondary Switching Area) மொத்தம் 29 பதவிகளும் (UR-21, OBC-3, SC-4. PH-01) நிரப்பப்பட உள்ளன.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 15-11-2008 (அதாவது விண்ணப்பிக்க கடைசி நாள்) அன்று 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு 5 வருடமும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வருடமும் அதிகபட்ச வயதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், பல்கலைக்கழத்திலிருந்து, 3 ஆண்டு இன்ஜினியரிங்கில் பட்டயம் டெலிகாம் என்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், ரேடியோ என்ஜினியரிங், கணினி என்ஜினியரிங், இன்ஸ்ட்ருமெண்ட் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், எம்.எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய பிரிவுகளில் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2009) ஜனவரி மாதம் 11ஆம் தேதி (11-01-2009) நடைபெற உள்ளது.
தேர்வுக் கட்டணம் : இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். இதனை சென்னையில் வழங்கத்தக்க வகையில், "Accounts Officer (C&A) HQ Zone. BSNL, Chennai Telephones" என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பெறப்பட்ட வரைவோலையாகவோ, அல்லது அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட போஸ்டல் ஆர்டராகவோ இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஊனமுற்றவர்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கடைசிநாளான வரும் 15ஆம் தேதிக்குள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சென்னை தொலைபேசிக்கு விண்ணப்பிப்பவர்களாக இருந்தால், துணை மண்டல பொறியாளர் (தேர்வு), பொது மேலாளர், 89, மில்லர்ஸ் ரோடு சென்னை- 600 010 என்று முகவரிக்கும், செங்கல்பட்டு காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களாக இருந்தால் மண்டல பொறியாளர் (நிர்வாகம்), எண் 40 சிபெட் சாலை, கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் உறையின் மேல் பதவியின் பெயரை எழுதி அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி வெளியான எம்ப்ளாய்மெண்ட் இதழை பார்க்கவும்.