வேலையில்லாத பட்டதாரிகளுக்கு இலவச கணினி பயிற்சியை பாரதிய வித்யா பவன் அளிக்க உள்ளது. இந்த பயிற்சி சென்னையில் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது.
இதுகுறித்து பாரதிய வித்யா பவன் இயக்குநர் டி.கே.பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற, படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு கணினி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
கணினி பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 18.
மேலும் விவரங்களுக்கு:
மயிலாப்பூர் முகவரி
பவன் காந்தி நிறுவனம், 18-22, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4;
தியாகராய நகர் முகவரி
பவன் காந்தி நிறுவனம், 12, தணிகாசலம் தெரு, தியாகராய நகர், சென்னை-17.