இந்திய விமானப்படை‌க்கு ஜனவரி 23இ‌ல் ஆள்சேர்ப்பு

இந்திய விமானப் படையில், பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் சேர ஜனவரி 23ஆ‌ம் தேதி ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர் அனில் மேஷராம் தெரிவித்துள்ளார்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 12ஆம் வகுப்பு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்‌கி‌ல் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், க‌ணி‌னி அ‌றி‌விய‌ல், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜியில் 50 ‌விழு‌க்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இந்திய விமானப் படையில் படை வீரராக பணியாற்ற 23.01.2009 அன்று சூலூரில் உள்ள விமானப் படை நிலையத்தில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமிற்கு வரு‌ம்போது, கல்விச்சான்றிதழ் மற்றும் அவற்றின் நகல்கள் (3 பிரதிகள்), இருப்பிடச் சான்றிதழ் (இருப்பிடம் மாறியவர்கள் மட்டும்), உடற்திறன் தேர்வுக்கான விளையாட்டு உடை (ஷார்ட்ஸ் மற்றும் ஷூ), மற்றும் 7 எண்ணிக்கை பாஸ்போர்ட் அளவு வ‌ண்ண புகைப்படங்கள் கொ‌ண்டுவர வேண்டும்.

இம்முகாமில் எழுத்து மற்றும் உடற்திறன் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் விண்ணப்பங்கள் அங்கேயே வழங்கப்படும். மேலும் விவர‌ங்களுக்கு கமாண்டிங் ஆபிசர், 8 ஏர்மென் தே‌ர்வு மைய‌ம், ஏர்போர்ஸ், தாம்பரம், சென்னை-46. எ‌ன்ற முகவ‌ரி‌யிலோ அ‌ல்லது 044-22791853, 22395553, 22393359 எ‌ன்ற தொலைபேசி எண்க‌ளிலோ தொட‌ர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம்" எ‌ன்று கூற‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்