குரூப்-1 நேர்காணல் தேர்வு‌க்கு இலவசப் பயிற்சி : ம‌னிதநேய அற‌க்க‌ட்டளை ஏ‌ற்பாடு

வியாழன், 11 டிசம்பர் 2008 (16:54 IST)
த‌மி‌ழ்நாடு அரசு‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்வாணைய‌த்‌தி‌‌ன் குரூ‌ப்-1 நே‌ர்காண‌ல் தே‌ர்வு‌‌க்கான இலவசப் பயிற்சிக்கு ம‌னிதநேய அ‌ற‌க்க‌ட்டளை ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளது.

த‌மி‌ழ்நாடு அரசு‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்வாணை‌யத்தா‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட 172 அரசுப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 26ஆ‌ம் தே‌தி முத‌ல் அடு‌த்த ஆ‌ண்டு ஜனவ‌ரி 3ஆ‌ம் தே‌தி வரை நடைபெறு‌கிறது.

இ‌ந்த நே‌ர்காண‌ல் தே‌ர்வு‌க்கு சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் அ‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ள இலவசப் பயிற்சி டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் நேர்காணல் தேர்வுக்கான ஆளுமைத் திறன், மாதிரி நேர்காணல், முந்தைய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்‌கி நடைபெறு‌ம். மேலும் விவரங்களுக்கு 044- 24358373, 9940670110, 9444570963 என்ற தொலைபே‌சி எண்களில் தொடர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்