இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வருகிற 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு திடலில் காலை 5.30 மணிக்கு ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிப்பாய் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் உதவியாளர்களுக்கு +2 கல்வித் தகுதியும் 50 விழுக்காடு மதிப்பெண்களும் இருத்தல் வேண்டும். 50 கிலோ எடையும், 77 செ.மீ விரிவாக்கத்தில் 82 செ.மீ மார்பளவும், 17 வயது 6 மாதங்கள் முதல் 23 வயது வரையும் 166 செ.மீ உயரம் இருப்பவர்களுக்கு 14ஆம் தேதி ஆள்சேர்ப்பு நடைபெறும்.
சிப்பாய் (பொதுப்பணி) பிரிவில் மேலே சொன்ன தகுதிகளுடன் மதிப்பெண்கள் மட்டும் 45 விழுக்காடு இருத்தல் வேண்டும். 17 வயது 6 மாதங்கள் முதல் 21 வயது வரை இருத்தல் வேண்டும். 15ஆம் தேதி ஆள்சேர்ப்பு நடைபெறும்.
சிப்பாய் தொழில்நுணுக்க அறிந்தவர் பிரிவிற்கு மெட்ரிக் இல்லாத 48 கிலோ எடையுள்ள 76 செ.மீ மார்பளவு விரிவாக்கத்தில் 81 செ.மீ அளவும், 166 செ.மீ உயரமும் 17 வயது 6 மாதங்கள் முதல் 23 வயது வரை உள்ளவர்களுக்கு 18ஆம் தேதி ஆள்சேர்ப்பு நடைபெறும்.
சிப்பாய் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவிற்கு 50 கிலோ எடையுள்ள 162 செ.மீ உயரமுள்ள 77 செ.மீ மார்பளவு விரிவாக்கத்தில் 82 செ.மீ. உள்ளவர்களும், 17 வயது 6 மாதம் முதல் 23 வயது வரையும், பிளஸ் 2 தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றுள்ளவர்களுக்கு 18ஆம் தேதி ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அனைத்து பிரிவு பணிகளுக்கும் முதல்நாள் சான்றிதழ் சரிபார்த்தலும், மறுநாள் உடற்தகுதி சரிபார்த்தலும் நடைபெறும்.
அனைத்திற்கும் அசல் சான்றிதழ்களும், 2 நகல்களும் கொண்டு வரவேண்டும். மேலும் ஆங்கிலத்தில் தங்களது இருப்பிட சான்றிதழ, சாதி சான்றிதழ், தனித்துள்ள புகைப்படம், அப்பகுதி தாசில்தாரின் முத்திரை பதிந்து கொண்டுவர வேண்டும்.
மெட்ரிகுலேஷன் கல்வித் தகுதி இல்லாத விண்ணப்பதாரர்கள் இடமாற்ற சானறிதழ் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கையொப்பம் பெற்றும், மதிப்பெண் சான்றிதழ் பள்ளி முத்திரையுடனும், தலைமை ஆசிரியர் கையொப்பத்துடனும் கொண்டுவர வேண்டும்.
விளையாட்டு மற்றும் என்.சி.சி. சான்றிதழ்கள் இருந்தால் கொண்டு வரலாம். விண்ணப்பதாரர் முன்னாள் படைவீரர் மகனாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஆவண அலுவலகத்தில் உறவுமுறை சான்றிதழ் வாங்கிவர வேண்டும். பர்சனல் நம்பர், ரேங்க், பெயர் உடன் இணைக்க வேண்டும். முன்னாள் படைவீரர் அலுவலக உதவி இயக்குனர் வழங்கும் உறவுமுறை சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
8 பாஸ்போர்ட் சைஸ் கலர் புகைப்படம் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரர்கள் காலை 5.30 மணிக்குள் வரவேண்டும். 5.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட மாட்டாது.
தேவையான தண்ணீர், உணவுப் பொட்டலங்களை விண்ணப்பதாரர்களே கொண்டுவர வேண்டும். திருமணமான விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடையவில்லை எனில் அவர்கள் பங்குபெற தகுதியற்றவர்கள்.
சிவில் சான்றிதழ்கள் அனைத்திலும் ராணுவத்தில் சேரும் பணிக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது என்று சான்றிதழ் வழங்குபவர்கள் சான்றிதழில் குறிப்பிட வேண்டும். மருத்துவத் தேர்விற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ராணுவ ஆள்சேர்ப்பு மைதானத்தில் 16ஆம் தேதி விண்ணப்பதாரர்களே உடல் பரிசோதனைகளையும், காதுகளுக்கு வேக்சின் கிளீன் செய்துவர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.