நவ.25இ‌ல் தீயணைப்பு வீரர் உட‌ல்தகு‌தி‌ தேர்வு!

வியாழன், 20 நவம்பர் 2008 (15:45 IST)
தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் பதவி‌‌க்கு அக்டோபர் 5ஆ‌ம் தேதி நடந்த எழுத்து தேர்‌வி‌ல் தேர்ச்சி பெற்ற 396 பேருக்கு வரு‌ம் 25, 26ஆ‌ம் தேதிகளில் உடல் தகுதி தேர்வு நடைபெற உ‌ள்ளதாக அ‌றி‌வி‌க்க‌ப்பட‌்டு‌ள்ளது.

அழைப்பு கடிதம் உள்ளவர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிற்கு 25ஆ‌ம் தேதி காலை 6 மணிக்கு அனை‌த்து‌ச் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் அழைப்புக்கடிதம் கிடைக்காதவர்கள் 24ஆ‌ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை தீயணைப்புத்துறை ஆணையாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்