756 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நாளை கல‌ந்தா‌ய்வு துவ‌க்க‌ம்!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (11:30 IST)
தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 756 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னையில் நாளை முதல் 20ஆ‌ம் தேதி வரை கல‌ந்தா‌ய்வு நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவ மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ மையங்களில் 756 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்துள்ளது.

காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக, அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து மருத்துவ அலுவலர் பெயர் பட்டியல் தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த மருத்துவர்கள், காலமுறை ஊதியத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள்.

இதற்கான பணி நியமன கலந்தாய்வு 15-10-2008 முதல் 20-10-2008 வரை (19.10.2008 தவிர) சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

அக்.15ஆ‌ம் தேதியன்று தொடங்கும் கலந்தாய்வில், 1985ஆ‌மஆ‌ண்டு எம். 09952, நாள் 6-12-85 முதல் 2001 எம். 11059, நாள் 17-8-2001 வரை பதிவு செய்த மருத்துவர்களும்;

அக்.16ஆ‌ம் தேதிய‌ன்றநட‌க்கு‌ம் கல‌ந்தா‌ய்‌வி‌ல், 2001ஆ‌ம் ஆ‌ண்டஎம். 11099, நாள் 17-8-01 முதல் 2002 எம். 06677, நாள் 24-4-2002 வரை உள்ளவர்களும்;

அக்.17ஆ‌ம் தேதியன்று, 2002ஆ‌ம் ஆ‌ண்டு எம் 07644, நாள் 24-04-02 முதல் 2003 எப் 05374, நாள் 6-6-2003 வரை உள்ளவர்களும்;

அக்.18ஆ‌ம் தேதியன்று, 2003ஆ‌ம் ஆ‌ண்டஎம் 06151, நாள் 12-6-2003 முதல் 2004 எப் 08975, நாள் 19-7-2004 வரை மற்றும் அக்.20-ந் தேதியன்று, 2004-ம் ஆ‌ண்டஎப் 10574, நாள் 20-7-2004 முதல் 2006 எப் 27300, நாள் 16-10-2006 வரை உள்ள பதிவு செய்தவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலந்தாய்வில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவ மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ மையங்களில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணிநியமன உத்தரவு கலந்தாய்வு நாள் அன்றே வழங்கப்படும். மேலே கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள வேலைவா‌ய்‌ப்பு பதிவு எண்கள் உள்ள மருத்துவர்கள், பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கல‌ந்தா‌ய்வு அழைப்புக் கடிதம் கிடைக்காவிட்டாலும் குறிப்பிட்ட தேதிகளில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்" எ‌ன்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்