மதரசாக்களுக்கு ரூ. 325 கோடி: மத்திய அரசு

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (15:31 IST)
மதரசா கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி அளிக்கும் திட்டத்திற்கு ரூ. 325 கோடியை ஒதுக்க, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் புதுடெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இஸ்லாமியர்களின் மதரசாக்கள், மக்தாப்ஸ், தரூல் உலூம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி அளிக்க ஏதுவாக, அதன் பாடத் திட்டங்களில் அறிவியல், கணிதம், மொழிப்பாடம், ஆங்கிலம் போன்றவற்றை அறிமுகம் செய்ய, அமைச்சரவைக்குழு ஒப்புதல் தந்தது. இதற்காக ரூ. 325 கோடியை ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்