பி.இ. பாடம்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (11:19 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் பி.இ., பி.டெக். பாடங்களில் தேர்ச்சி பெறாதவ மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வெழுத வய்ப்பு அளிக்கப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முழுநேர, பகுதி நேர பி.இ., பி.டெக்., பி. ஆர்க். பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அத்தேர்வை மீண்டும் எழுதுவதற்கு இறுதி வாய்ப்பளிக்க, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் தந்துள்ளது.

இதன்படி வரும் நவம்பர் மாதத்தில் பி.இ., பி.டெக்., பி. ஆர்க். பாடங்களுக்கான சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுக்கு வழக்கமான கட்டணமும், அதனுடன் அபராதத்தொகை ரூ. 15 ஆயிரத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

இதனை மாணவர்கள், அவர்கள் படித்த கல்லூரியின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியாகும்.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்