ஊனமுற்றோருக்கு கல்வி உதவி: மாற்று திட்டம் வருகிறது!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:52 IST)
பள்ளிகளில் படித்து வரும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு தற்போதுள்ள ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு பதிலாக, செகண்ட்ரி அளவில் புதிய கல்வி திட்டத்தை மத்திய அரசு
அறிமுகம் செய்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி தற்போதுள்ள ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு பதில் செகண்ட்ரி அளவில் புதிய கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்திற்கு 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 1,260 கோடி ஒதுக்கவும் இக்கூட்டத்தில் அனுமதி தரப்பட்டது.

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 5.2 லட்சம் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பயனடைவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்