10வது தனித்தேர்வு: 22ல் நுழைவுச்சீட்டு!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:48 IST)
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வுகளுக்கான தேர்வு அனுமதி நுழைவுச்சீட்டுகள் வரும் 22ம் தேதி முதல் அளிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் வகுப்பு மற்றும் ஓ.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடந்தன. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக இம்மாதம் 25 ஆம் தேதி மீண்டும் தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்வை எழுதும் தனித்தேர்வர்களுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தேர்வு அனுமதி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.

நுழைவுச்சீட்டை பெறும்போது அதில் தங்கள் பெயர், பிறந்ததேதி, தேர்வு மையம், பதிவு எண், தேர்வு எழுதும் பாடங்கள் போன்றவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு அனுமதி நுழைவுச் சீட்டு எக்காரணம் கொண்டும் தபாலில் அனுப்பி வைக்கப்படாது. தேர்வு தொடங்குவதற்கு முதல் நாளன்று ரூ. 30-க்கு அஞ்சல்தலை ஒட்டப்பட, சுய முகவரி எழுதப்பட்ட உறையை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்