பள்ளிகளில் உடற்கல்வியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று, உடற்கல்விப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமலைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தகுதி மற்றும் உணவு முறை பற்றிய புத்தாக்கப் பயிற்சி, சென்னையில் நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உடற்கல்விப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் திருமலைசாமி பேசியதாவது:
பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உடற்கல்வியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். இதற்கான பரிந்துரை தமிழக அரசிடம் அளிக்கப்படும். இதற்காக எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழு, விரைவில் அரசிடம் முழு அறிக்கையை அளிக்கும். இப்பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் உடற்கல்வி கட்டாய பாடமாகும்.