என்.ஐ.ஐ.டி. ஸ்காலர்ஷிப் தேவையா?

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (12:53 IST)
நாட்டின் முன்னணி நிறுவனமான என்.ஐ.ஐ.டி, தகவல் தொழில் நுட்பத்துறை மாணவர்களுக்கு உதவித் தொகை அளிப்பதற்கான தேர்வை வரும் 21 ஆம் தேதி நடத்துகிறது.

'பவிஷ்ய ஜோதி ஸ்காலர்ஷிப்' என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 400 மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வு, 12 ஆம் வகுப்பு பாட அடிப்படையில் நடத்தப்படுகிறது. மேலும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வையும் இது கொண்டிருக்கும்.

இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களில் கட்டண உதவித்தொகை, சலுகைகள் தரப்படும். அதாவது படிப்புக் கட்டணத்தில் ரூ. 40 ஆயிரம் வரை சலுகை பெறலாம். பட்டதாரி விண்ணப்பதாரர்கள் 500 பேருக்கு 100 சதவீத உதவித்தொகையும் தரப்படும்.

'பவிஷ்ய ஜோ ஸ்காலர்ஷிப்' திட்டத்தின்படி நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகையை அளிக்க என்.ஐ.ஐ.டி. தீர்மானித்துள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள என்.ஐ.ஐ.டி. மையங்கள், அல்லது என்ஐஐடி.காம் என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்