குரல் வளம்: சான்றிதழ் படிப்பு தொடக்கம்!

குரல்வளம் காக்கும் 3 மாத கால சான்றிதழ் படிப்பை சென்னையில் உள்ள இரண்டு முன்னணி கல்வி நிறுவனங்கள் கூட்டாக நடத்துகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய இசைத் துறையும், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் பேச்சியல்- கேட்டியல் துறையும் இணைந்து இதற்கான வகுப்புகளை தொடங்கவிருக்கின்றன.

வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல், ஒவ்வொரு வார இறுதி நாள்களில் இந்த சான்றிதழ் படிப்புக்கான வகுப்புகள் நடைபெறும். இசை ஆர்வலர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள், கால் சென்ட்டரில் பணி புரிவோர் உள்ளிட்ட பலரும் இந்த பாடத்தில் சேர்ந்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்