பட்டதாரி ஆசிரியர் பணி: விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு

புதன், 10 செப்டம்பர் 2008 (18:07 IST)
தமிழகத்தில் 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் வகையில் அதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது.

தொடக்கப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்