10 பொறியியல் கல்லூரிகளில் 315 இடங்கள் ரத்து

திங்கள், 7 ஜூலை 2008 (12:08 IST)
தமிழகத்தில் உள்ள 10 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் உள்ள இடங்களில் மொத்தம் 315 இடங்களுக்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக‌ம் ரத்து செய்துவிட்டது.

இது குறித்த விவரம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக‌‌த்‌தி‌ன் ஏ.ஐ.சி.டி.இ. இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

முத‌லி‌ல் இட‌ங்க‌ள் அ‌திக‌ரி‌ப்ப‌‌ட்டிரு‌க்கு‌ம் ‌விவர‌த்தை அ‌றிவோ‌ம் :

வேலூரில் உள்ள ஜிஜிஆர் பொறியியல் கல்லூரியில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அங்கு, கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்புக்கு 75லிருந்து 105ஆகவும், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்புக்கு 71லிருந்து 109 ஆகவும் இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், பயோடெக்னாலஜியில் உள்ள 60 இடங்கள் 45 ஆகக் குறைந்துவிட்டது.

குறை‌க்க‌ப்ப‌ட்ட ‌இட‌ங்க‌ளி‌ன் ‌விவர‌ம்

சில கல்லூரிகளில் மரைன் பொ‌றி‌யிய‌ல் படிப்புக்காக ஒப்புதல் அளித்த அனைத்து இடங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. திருவிடைமருதூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள மெக்கானிக்கல் இடங்கள் 60 லிருந்து 45 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

அது போல், சென்னையை அடுத்த படப்பையில் உள்ள டேனிஷ் அகமது பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் படிப்புக்கான இடம் 60லிருந்து 45 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை குறிஞ்சி பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டு வந்த பயோமெடிக்கல் பொ‌றி‌யிய‌ல் படிப்பு ரத்து செய்யப்பட்டது. அதில் 60 மாணவர்களைச் சேர்க்க அனுமதி இருந்தது.

சென்னை, கேளம்பாக்கம் முகமது சதக் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயன்ஸ், தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் தலா 15 இடங்களும், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பில் 30 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி கோவில்பட்டி தே‌சிய‌க் கல்லூரியில் நடத்தப்பட்ட மரைன் படிப்புக்கான 40 இடங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

சிவகங்கை மாவட்டம் பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லூரியில் ஐ.டி. படிப்பில் 30 இடங்களும், மெக்கானிக்கல் படிப்பில் 15 இடங்களும் குறைக்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியில் பயோமெடிக்கல் பொ‌றி‌யிய‌ல் படிப்புக்கான இடங்கள் 90லிருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் திருமலை பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்புக்கான இடங்கள் 60லிருந்து 45 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த தாழம்பூர் வேல் சீனிவாசா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல், மரைன் பொ‌றி‌யிய‌ல் ஆகிய படிப்புகளில் உள்ள தலா 60 இடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்