பி.எஸ்.சி. படித்த பட்டதாரிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (15.05.08) அன்று நடக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமை சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, பயோ-டெக்னாலஜி, நர்சிங், பிசியோ தெரபி பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்பவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. உரிய கல்வித் தகுதியோ, 30 வயதைக் கடந்தவர்களோ இந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியல் காகர்லா உஷா கேட்டுக் கொண்டுள்ளார்.