புள்ளியியல் அலுவலர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
புதன், 19 மார்ச் 2008 (11:34 IST)
இந்திய அளவிலான புள்ளியியல் அலுவலர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுக்கு விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு பணியாளர் தேர்வாளணயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புள்ளியியல் அலுவலர் (ஸ்டாஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்ஸ்) கிரேடு 3 மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் தொடர்பான காம்பிளர் பணியிடங்கள் அகில இந்திய அளவில் நிரப்பப்பட உள்ளன. புள்ளியியல் அலுவலர்களுக்கு 199 பணியிடங்களும், காம்பிளர்களுக்கு 761 பணியிடங்களும் நிரப்பப்படும்.
14-4-2008 அன்று 18 முதல் 25 வயது உடையவராக புள்ளியியல் அலுவலர் பணிக்கும், 18 முதல் 27 வயது உடையவராக காம்பிளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் வழக்கம் போல ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு வயது வரம்பில் விதிவிலக்கு உண்டு.
புள்ளியியல் அலுவலர் தேர்வுக்கு புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலைபட்டம் பெற்றிருக்கவேண்டும்.
காம்பிளர் பணிக்கு பொருளாதாரம் அல்லது புள்ளியியல், கணிதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க பிராந்தியம் மற்றும் துணை பிராந்திய ஆணைய அலுவலகம் உள்ள இடங்களில் உள்ளவர்கள் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற இடங்களில் உள்ளவர்கள் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு .ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்த விவரங்களை அறிய ஆணையத்தின் htttp://www.ssc.nic.in. என்ற இணையதளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.