மே 18 முதல் இந்திய நிர்வாகப் பணித் தேர்வுகள்!

வியாழன், 3 ஜனவரி 2008 (17:01 IST)
இந்திய நிர்வாகப் பணி, இந்திய அயலுறவுப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட பல்வேறு குரூப் ஏ மற்றும் பி பணிகளுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய நிர்வாகப் பணி (முதன்மை) தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியன்று துவ‌ங்கு‌கிறது.

இத்தேர்வு நாடெங்கிலும் ‌அமை‌க்க‌ப்படவுள்ள பல்வேறு மையங்களில் நட‌க்கும்.

இ‌ந்‌திய‌கநிர்வாகபப‌ணித் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுமுறை, தேர்வு மையங்கள், விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கான நெறிமுறைகள் ஆகிய அனைத்தும் டிசம்பர் 29 ஆம் தேதியிட்ட 'எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முறை, பொதுஅறிவுத் தாள்கள் மற்றும் அனைத்து விருப்பப் பாடங்களுக்கான (மொழிகளுக்கான பாடங்கள் தவிர), முக்கிய தேர்வுக‌ளி‌ன் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை, புதுடெ‌ல்லியிலுள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உதவி மையத்தை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (011- 23385271, 23381125, 23098543) அணுகிப் பெறலாம். தேர்வு தொடர்பான தகவல்கள் ஆணையத்தின் இணையதளத்திலும் www.upsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்