சில்லறை வர்த்தக மேலாண்மை குறித்த பட்டமேற்படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு ஜனவரி 27-ஆம் தேதி நடக்கிறது. சென்னை உள்பட 25 இடங்களில் இதற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
நாடுமுழுவதும் 40-க்கும் மேற்பட்ட வர்த்தக மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் சென்னை வர்த்தகப் பள்ளி (சி.பி.எஸ்.) உள்ளிட்ட 15 நிறுவனங்கள் சில்லறை வர்த்தக மேலாண்மை படிப்புகளை அளிக்க முடிவு செய்துள்ளன.
ஏதாவது ஒரு பாடப் பிரிவில் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்தந்த நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்யில் மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 15 கல்வி நிறுவனங்களிலும் சேர்த்து 1,500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த நுழைவுத் தேர்வு ஜனவரி 27-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் பெற இணையதள முகவரி: www.cart2008.com.