அண்ணா பல்கலையில் ஸ்மார்ட் கார்டு

Webdunia

வெள்ளி, 20 ஜூலை 2007 (12:04 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அட்டை மூலம் நுழைவு அனுமதி வழங்கப்படும். வருகைப்பதிவு குறிக்கப்படும். தனியாக வருகைப்பதிவு ஆவணத்தில் கையெழுத்து போடத் தேவையில்லை. ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால்தான் நூலகத்திற்குள் நுழைய முடியும். இந்த அட்டை மூலம் ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் வகையில் அதற்கான சாதனங்கள் அமைக்கும் பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தும்போது அன்றாடம் பல்கலைக்கழகத்திற்கு வரும் வெளிநபர்களை எந்த முறையில் உள்ளே அனுமதிப்பது? அவர்களுக்கு தனியாக பார்வையாளர் ஸ்மார்ட் கார்ட் அட்டை வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்