சட்ட படிப்புக்கு நுழைவுத்தேர்வு இல்லை

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (15:32 IST)
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, நடப்பு கல்வி ஆண்டில் சட்ட படிப்பிற்கு நுழைவுத்தேர்வு இல்லாமல் மாணாக்கர்களை சேர்த்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்து, நுழைவுத்தேர்வு மூலமாகத்தான் சட்ட படிப்புக்கு மாணவர்களை சேர்க்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆகியோர் அரசின் சார்பில் வாதாடினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்தனர். நடப்பு கல்வி ஆண்டில் சட்ட கல்லூரி மாணவர்களை நுழைவுத்தேர்வு இல்லாமல் சேர்த்து கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்