10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொல்வி அடைந்த மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுதும் வகையில் துணைத்தேர்வு அட்டவணையை தேர்வுத் துறை இயக்ககம் வெளிட்டுள்ளது.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் பெயிலானவர்கள் இந்த ஆண்டிலேயே கல்வியை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றால் உடனே உயர்வகுப்பில் சேரலாம்.
இந்நிலையில் 10ம் வகுப்பு சிறப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள்.
இதையடுத்து தேர்வுத் துறை இயக்ககம், துணைத் தேர்வுக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. அதன்படி, 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஜுலை 4-ந்தேதி தமிழ் முதல் தாள், 5-ந்தேதி தமிழ் 2-வது தாள், 6-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 7-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 9-ந்தேதி கணிதம், 11-ந்தேதி அறிவியல், 12-ந்தேதி சமூக அறிவியல்.
இதே நாட்களில்தான் ஒ.எஸ்.எல்.சி. பாடங்களின் தேர்வுகளும் நடைபெற உள்ளன. மேலும் ஜுலை 3-ந்தேதி சமஸ்கிருதம் மற்றும் அரபி முதல் தாள், 10-ந்தேதி 2-வது தாள் தேர்வும் நடைபெறும்.
ஆங்கிலோ இந்தியன் மாணாக்கர்களுக்கு ஜுலை 2-ந்தேதி மொழித்தாள், 4-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 5-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 6-ந்தேதி கணிதம் முதல் தாள், 7-ந்தேதி கணிதம் 2-வது தாள், 9-ந்தேதி அறிவியல் முதல் தாள், 10-ந்தேதி அறிவியல் 2-வது தாள், 11-ந்தேதி வரலாறு-சிவிக்ஸ், 12-ந்தேதி புவியியல்.
10ம் வகுப்பு மெட்ரிகுலேசன் மாணாக்கர்களுக்கு ஜுலை 2-ந்தேதி தமிழ் முதல்தாள், 3-ந்தேதி தமிழ் 2-வது தாள், 4-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 5-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 6-ந்தேதி கணிதம் முதல் தாள், 7-ந்தேதி கணிதம் 2-வது தாள், 9-ந்தேதி அறிவியல் முதல் தாள், 10-ந்தேதி அறிவியல் 2-வது தாள், 11-ந்தேதி வரலாறு -சிவிக்ஸ், 12-ந்தேதி புவியியல், பொருளாதாரம்.