பொதுத்தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் பாதிப்பு

த‌னியா‌ர் ப‌ள்‌ளி‌க‌ளி‌ல் த‌மி‌ழ் வ‌ழி‌க் க‌ல்‌வி‌யி‌ல் படி‌க்கு‌ம் 25,000 மாணா‌க்க‌ர்க‌ள் அரசு பொது‌த் தே‌ர்வு எழுத முடியாம‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இது கு‌றி‌த்து தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் முத்தையா சக்தி, பொதுச்செயலாளர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் பேசுகை‌யி‌ல், அரசு உத்தரவின்படி, மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி நடத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் க‌ற்‌பி‌க்க‌ப்படு‌ம் பாடத்திட்டத்தைத்தான் நாங்களும் கடைப்பிடிக்கிறோம். மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

த‌மிழக முதலமைச்சர் கருணா‌நி‌தி உத்தரவிட்டால்தான் இந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்போம் என்று மெட்ரிக்குலேஷன் அதிகாரிகள் சொல்கிறார்கள். எனவே, 25 ஆயிரம் மெட்ரிக் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி உரிய உத்தரவை பிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் எ‌ன்று கூ‌றினா‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்