மதுரை காமராச‌ர் ப‌ல்கலை‌.‌யி‌‌ன் தொலை‌நிலை ‌பி.எ‌ட். படி‌‌ப்‌பி‌ற்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்

திங்கள், 29 டிசம்பர் 2008 (16:17 IST)
மதுரை காமரச‌ர் ப‌ல்கலை‌க் கழ‌க‌‌த்‌தி‌‌ன் 2009ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான இள‌ங்கலை க‌ல்‌வி‌யிய‌ல் (B.Ed.) ப‌ட்ட‌ப் படி‌ப்‌‌பு ஆ‌ங்‌கில வ‌ழி தொலை‌நிலை‌ப் ப‌யி‌ற்‌சி‌யி‌ல் சேர ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ஜனவ‌ரி 7ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌கிறது. நுழைவு‌த் தே‌ர்வு மா‌ர்‌ச் மாத‌ம் நடைபெறு‌ம். நுழைவு‌த் தே‌ர்வு நடைபெறு‌ம் இடமு‌ம் தே‌தியு‌ம் ‌பி‌ன்ன‌ர் அ‌றி‌‌வி‌க்க‌ப்படு‌ம்.

இ‌ப்ப‌யி‌ற்‌சி‌யி‌ல் சேர அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் ப‌ட்ட‌ம் பெ‌ற்‌றிரு‌த்த‌ல் வே‌ண்டு‌ம். அரசு அ‌ங்‌கீகார‌ம் பெ‌ற்ற ப‌ள்‌ளிக‌ளி‌ல் 2 ஆ‌ண்டுக‌ள் க‌ற்‌பி‌த்த அனுபவ‌த்துட‌ன் ப‌ணியா‌ற்‌றி வரு‌ம் ஆ‌சி‌ரிய‌ர்களாக இரு‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.

பி.எ‌ட். ப‌ட்ட‌ப்படி‌ப்‌பி‌ற்கான மாணவ‌ர் சே‌ர்‌க்கை மதுரை காமராச‌ர் ப‌ல்கலை‌க்கழக‌ தொலை‌நிலை‌க் க‌ல்‌வி இய‌க்கக‌ம் நட‌த்து‌ம் நுழைவு‌த் தே‌ர்‌வில பெறு‌ம் ம‌தி‌ப்பெ‌ண்க‌‌ளி‌ன் தரவ‌ரிசை அடி‌ப்ப‌டையிலு‌ம், த‌மிழக அர‌சி‌ன் இனவா‌ரி சுழ‌ற்‌‌சிமுறை அடி‌ப்பை‌யிலு‌ம் அமையு‌ம்.

பி.எ‌ட். சே‌ர்‌க்கை‌க்கான தகவ‌ல் அ‌றி‌க்கை ம‌ற்று‌ம் ‌வி‌ண்ண‌ப்ப‌ப் படிவ‌த்‌தினை மதுரை காமராச‌ர் ப‌ல்கலை‌க் கழக‌ தொலை‌நிலை‌க் க‌ல்‌வி இய‌க்கக‌த்‌தி‌ல் "Director. DDE, Madurai Kamaraj University, Madurai - 625 021" எ‌ன்ற பெய‌ரி‌ல் ரூ.500‌க்கான கே‌ட்பு வரைவோலையை நே‌ரி‌ல் செலு‌த்‌தி‌ப் பெ‌ற்று‌க்கொ‌ள்ளலா‌ம். (பணமாக‌ச் செலு‌த்த இயலாது).

தபா‌லி‌ல் பெறுவத‌ற்கு ரூ.550‌க்கான கே‌ட்பு வரைவோலையை முகவ‌ரியுட‌ன் உ‌ள்ள கடித‌த்துட‌ன் அனு‌ப்ப வே‌ண்டு‌ம். ‌நிர‌ப்ப‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் அனு‌ப்ப‌ப்படு‌ம் அ‌ஞ்ச‌ல் உறை‌யி‌ன் மே‌ல் "‌பி.எ‌ட். சே‌ர்‌க்கை‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம்" என கு‌‌றி‌ப்‌பிட வே‌ண்டு‌ம்.

பூ‌ர்‌த்‌தி செ‌ய்த ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை இய‌க்குந‌ர், தொலை‌நிலை‌க் க‌ல்‌‌வி இய‌க்கக‌ம், மதுரை காமராச‌ர் ப‌ல்கலை‌க்கழ‌க‌ம், மதுரை - 625 021 எ‌ன்ற முகவ‌ரி‌‌க்கு ம‌ட்டு‌ம் அனு‌ப்‌பி வை‌க்கவே‌ண்டு‌ம்.

வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் வ‌ந்து சேரவே‌ண்டிய இறு‌திநா‌ள் 27.02.2009 ஆகு‌ம். காலதாமதமாக பெற‌ப்படு‌ம் ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌ப்பட மா‌ட்டாது எ‌ன்று அ‌ப்ப‌ல்கலை‌க் கழக இய‌க்குந‌ர் சபா. வடிவேலு ம‌ற்று‌ம் ப‌திவாள‌ர் ஐ. ‌சி‌ங்கார‌ம் ஆ‌கியோ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்