ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:45 IST)
சென்னையில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.
ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த இந்திய தொழிற்கல்வி சம்மேளன அமைப்பின் (ஐ.எஸ்.டி.இ.) தேசிய மாநாட்டில் சம்மேளனத்தின் தலைவர் ஷெட்டி, ஆம்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர் மற்றும் கல்லூரி முதல்வர் எம்.ஆர். ஜெயதீர்த்தராவ் ஆகியோரிடம் இந்த விருதினை வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான இந்த விருதைப் பெற, நாடு முழுவதும் உள்ள 4,000 பொறியியல் கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இதில் 38 கல்லூரிகளின் மனு நிராகரிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக அனைத்து தகுதிகளும் பெற்ற ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதானது, கல்வி போதிக்கும் முறைகள், வேலைவாய்ப்புக்கான பயிற்சி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல, உயர்ந்த கட்டமைப்பு, தூய்மை மற்றும் பசுமையான சுற்றுச்சூழல், மாணவர்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது.