கல்வித்துறை மூலம் விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்புநலம் என்ற திட்டத்தின் கீழ் கல்வித் துறை மூலமாக இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,250ம், மாணவிகளுக்கு ரூ.1,500ம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,750ம், மாணவிகளுக்கு ரூ.2,000மும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையினை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரின் விவசாய அடையாள அட்டை, நியாயவிலை அட்டை சாதிச்சான்று மற்றும் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள் ஆகியவற்றின் நகல் சான்றுகளோடு விண்ணப்பிக்க வேண்டும்.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் முதன்மை கல்வி அலுவலரிடமும் விண் ணப்பித்து இந்த திட்ட பயனை பெற்றுக் கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.