"சயின்ஸ் குவெஸ்ட் 2008" - மாணவர்களுக்கான அறிவியல் திறன் போட்டி!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (06:18 IST)
பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் திறமையை வெளி கொண்டுவரும் பொருட்டு "சயின்ஸ் குவெஸ்ட் 2008" என்ற போட்டியை இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் போட்டி மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, 28, டாக்டர் குருசாமி ரோடு, சேத்துபட்டு, சென்னை-600 031 என்ற முகவரியில் நவம்பர் 29, 2008 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆங்கில வழியில் 45 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். இதற்கென அச்சிடப்பட்ட கேள்வித்தாள்கள், விடைத்தாள்கள் தேர்வின் போது வழங்கப்படும். அடிப்படை அறிவியலில் மாணவர்களின் திறமைகளை வெளி கொண்டுவரும் அடிப்படையில் அப்ஜெக்டிவ் டைப் முறையில் எழுத்து தேர்வு இருக்கும். தேர்வு எழுத வருவோர் பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மாணவர்களே கொண்டுவர வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற (பள்ளி கல்வித் துறை/மெட்ரிகுலேஷன்/சி.பி.எஸ்.சி.) பள்ளிகளில் படிக்கும் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்தப் போட்டிக்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு பள்ளியும் இரண்டு பேர் கொண்ட மூன்று குழுக்களை போட்டிக்கு அனுப்பலாம். இதில் போட்டியிடும் குழுவினரை தேர்ந்தெடுக்கும் உரிமை போட்டி நடத்துபவர்களுக்கு உண்டு. முதலில் வரும் 100 குழுக்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இதற்கு நுழைவு, பதிவு, பங்கேற்பு கட்டணம் எதுவுமில்லை. போட்டியில் பங்கேற்பவர்களுக்கு போக்குவரத்து கட்டணங்கள் எதுவும் வழங்கப்படாது.
போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவிகள் தங்களது புகைப்படத்துடன் கூடிய பள்ளியின் அடையாள அட்டை மற்றும் பள்ளியிலிருந்து வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழ் ஆகியவற்றுடன் நவம்பர் 29 காலை 9 மணிக்கு போட்டு நடக்கும் பள்ளிக்கு வரவேண்டும்.
The Principal Dr Gurusamy Salai Chetpet, Chennai-600 031 Ph: 044-2642 7088/2643 1047
என்ற முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம். முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி நிர்வாகத்திடம் சான்றளிக்கப்பட்டு நவம்பர் 20 வியாழக்கிழமை முன்பாக போட்டி அமைப்பாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் உடனே அறிவிக்கப்படும். 16 குழுக்கள் (32 மாணவர்கள்) மட்டும் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் கெம் குவெஸ்ட் 2008 தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் மகாபலிபுரம் அருகில் உள்ள இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்திற்கு திங்கள்கிழமை 01.12.2008 அழைத்து செல்லப்படுவார்கள். ஒவ்வொரு குழுவினருடன் ஒரு அறிவியல் ஆசிரியர் உடன் வரலாம். இதற்கான அனைத்து செலவுகளையும் போட்டி அமைப்பாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.