அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பருவமுறை அல்லாத இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொலைநிலை கல்வி மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், "அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பருவமுறை அல்லாத இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேலும் தொடர் வகுப்புகள் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. அதன் விவரம் : எம்.பி.ஏ. பேங்கிங் மற்றும் பைனான்ஸ் 1,2,3,4,-வது செமஸ்டர்களுக்கு வருகிற 8ஆம் தேதி வரையிலும் பி.ஜி.டி.சி.ஏ முதல் மற்றும் 2-வது செமஸ்டர்களுக்கு வருகிற 12ஆம் தேதி வரையிலும் தொடர் வகுப்புகள் வகுப்புகள் நடைபெற உள்ளன.
எம்.சி.ஏ முதல் செமஸ்டருக்கு வருகிற 13ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரை 10 நாட்களும், எம்.பி.ஏ ஆஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் முதல் மற்றும் 2,3,4-வது செமஸ்டர்களுக்கு வருகிற 8, 9, 15, 16, 22, 23 ஆகிய தேதிகளிலும் தொடர் வகுப்புகள் நடைபெற உள்ளன.
எம்.பி.ஏ. டூரிசம் மற்றும் கார்ப்பரேட் செக்கரடரிஷிப் 1,2,3,4-வது செமஸ்டர்களுக்கு 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 6 நாட்களும், பி.சி.ஏ. 3-வது வருடத்திற்கு வருகிற 13ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை 15 நாட்களும், பி.லிட் 3-வது வருடத்திற்கு வருகிற 8,9,15, 16,22,23 ஆகிய தேதிகளில் 6 நாட்களும், பி.காம் 3-வது வருடம் 4ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை 6 நாட்களும் தொடர் வகுப்புகள் நடைபெற உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.