தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கு பி.எட். பயிற்சி!
புதன், 22 அக்டோபர் 2008 (12:03 IST)
சென்னை மாவட்ட, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், மாணவ- மாணவிகளுக்கு இளைநிலை ஆசிரியர் (பி.எட்.) பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவ-மாணவிகள் 5 பேருக்கு ஓராண்டு கால பி.எட். பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், "மாவட்ட மேலாளர், தாட்கோ, சிங்காரவேலர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் வளாகம், சென்னை' என்ற முகவரியில் இன்று முதல் (அக்டோபர் 22) வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 30ஆம் தேதி நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அன்றைய தினமே நேர்காணல் நடைபெறுகிறது.
தேர்வு செய்யப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.