நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் தகவல் தொழில் நுட்பத்தை விரிவு படுத்தும் நடவடிக்கையாக, அங்குள்ள இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வியையும், அது தொடர்பான பயிற்சிகளையும் இலவசமாக அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கென 'காந்தி தகவல் தொழிநுட்பக்கழகம்' (ஜிஐஐடி) என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. அசாம், மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு, பாரதீய வித்யா பவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கவுஹாத்தி, ஜோர்ஹத் (அசாம்), ஷில்லாங் (மேகாலயா), அகர்தலா (திரிபுரா), கோஹிமா (நாகாலாந்து) மற்றும் கங்டோக் (சிக்கிம்) ஆகிய இடங்களில், இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிக்க மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
இப்பயிற்சி மூன்ற மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது. பிரதமரின் சிறப்பு நிதியில் இருந்து இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.