சென்னையைச் சேர்ந்த வேல்ஸ் கல்விக் குழுமம் 24 ஆம் தேதி முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்படவுள்ளது. இதற்கான துவக்க விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொள்கிறார்.
சென்னையில் செயல்பட்டு வரும் வேல்ஸ் கல்விக் குழுமத்திற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதையடுத்து வரும் 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு வேல்ஸ் கல்லூரி வளாகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இதில் கலந்து கொண்டு, முறையான அறிவிப்பை வெளியிடுகிறார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் வரவேற்புரை வழங்குகிறார். இதுதவிர பல்வேறு கல்வியாளர்கள், பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
நடப்பு கல்வியாண்டு முதல் வேல்ஸ் குழுமங்களைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்.