உயிர் அறிவியல் பள்ளியை சிறப்புத் தகுதி மையமாக மேம்படுத்துவதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழங்களில் செயல்படும் ஒரு துறையை தேர்வு செய்து, அது சிறப்புத் தகுதி மையமாக மேபடுத்தப்படுகிறது.
இவ்வகையில் கடந்த ஆண்டு பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. இவ்வாண்டு, பாரதிதாசன் பல்கலைக் கழக உயிர் அறிவியல் பள்ளியை சிறப்புத் தகுதி மையமாக மேம்படுத்துவதற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது.