தகவ‌ல் தொ‌‌ழி‌ல்நு‌‌ட்ப துறை‌யி‌ல் வேலைவா‌ய்‌ப்பு: அரசு அ‌றி‌க்கை வெ‌ளி‌‌யிட ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (11:47 IST)
''கடந்த 6 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள், விதி விலக்குகளால் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ரராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை பொதுப்படையாகவும், தெளிவற்றதாகவும் இருக்கிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை உற்பத்தியில் 25 ‌விழு‌க்காடஅளவை அடைவது என்ற இலக்கு அய‌ல்நா‌ட்டகருத்துரையாளர்கள் அளித்த சரிபார்க்கப்படாத மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பதையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இது ஊக மதிப்பீடாகவும், அதிகம் ஆசைப்படுவதாகவும் உள்ளது. இதை உறுதிப்படுத்த கடந்த காலச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சான்றுகள் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கையில் குறிப்பிடவில்லை.

தமிழ்நாடு திட்டக்குழு, 2011-12-ல் தமிழகத்தின் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மூன்றரைக்கோடிக்கு மேல் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைய திட்டப்படி 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வைத்துக்கொண்டாலும் கூட மொத்த உழைக்கும் மக்கள் எண்ணிக்கையில் இது 8.5 சதவீதம் ஆக மட்டுமே இருக்கிறது. மீதியுள்ள 91.5 சதவீதத்தினருக்கு என்ன வழி?.

தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த 6 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள், விதி விலக்குகளால் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்