ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஆய்வு: உயர் நீதிமன்றம் உ‌த்தரவு!

வியாழன், 24 ஜூலை 2008 (15:07 IST)
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக‌ளி‌ல், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்ய விரும்பினாலவிதியில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமஎன்று செ‌ன்னஉயர் நீதிமன்றமஉ‌த்தர‌‌வி‌ட்டு‌ள்ளது.

ஈரோடு மாவட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்த த‌னியா‌‌ர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து‌ள்ள மனுவி‌ல், எங்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 50 மாணவ, மாணவிகளை சேர்க்க 2004ஆ‌ம் ஆண்டு அங்கீகாரம் பெற்றோம். 2005-06ஆ‌ம் ஆண்டுக்கு மேலும் 50 மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். அந்த மனுவை பெங்களூரிலுள்ள தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் பரிசீலித்தது.

இந்நிலையில், எங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. பல குறைபாடுகள் உள்ளஎன்று தமிழக அரசு கொடுத்த புகாரின்பேரில், பள்ளியை ஆய்வு செய்ய வருவதாக கல்விக் கவுன்சில் தா‌க்‌கீது அனுப்பியது.

தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறைப்படி, பள்ளியில் என்னென்ன குறைபாடு உள்ளது என்றும், எத்தனை பேர் ஆய்வு செய்ய வருகிறோம் என்பது குறித்து‌ம் முன்கூட்டியே தகவல் கொடுத்த பிறகே தா‌க்‌கீதஅனு‌ப்வேண்டும்.

ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களுக்கு தா‌க்‌கீது அனுப்பியுள்ளார்கள். எனவே இதை ரத்து செய்ய வேண்டும். எ‌ன்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழ‌க்கநீதிபதி மோகன்ராம் மு‌ன்‌னி‌லை‌யி‌ல் ‌விசாரணை‌க்கவ‌ந்தது. வழ‌க்கை ‌‌விசா‌ரி‌த்நீதிபதி, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறையில் கூறியுள்ளபடி முன்கூட்டியே தகவல் தெரிவித்த பிறகுதான் ஆய்வு செய்ய முடியும். தமிழக அரசிடமிருந்து புகார் வந்த உடனே ஆய்வு செய்ய வருகிறோம் என்று தா‌க்‌கீது அனுப்பியது தவறானது.

அதனா‌லஅதை ரத்து செய்கிறேன். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்ய விரும்பினால், விதியில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்