லயோலா கல்லூரியில் கணித ஆராய்ச்சி மாநாடு நாளை துவக்கம்!
வியாழன், 24 ஜூலை 2008 (13:57 IST)
சென்னை, லயோலா கல்லூரியின் கணிதத்துறை சார்பில் கணிதம், கணினி அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச மாநாடு ஜுலை 25, 26ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது.
இது குறித்து சென்னை லயோலா கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியை இந்திரா ராஜசிங் கூறுகையில், "லயோலா கல்லூரியின் கணிதத்துறை சார்பில் கணிதம், கணினி அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச மாநாட்டை வரும் 25, 26 தேதிகளில் நடத்த உள்ளோம்.
லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா, ஈராக், பூட்டான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கணிதம், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள் கலந்துகொள்கிறார்கள். 160க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இம்மாநாட்டில் முதுகலை கணிதம், கணினி அறிவியல், எம்.பில்., பிஎச்.டி. படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். மாநாட்டை காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரன் தொடங்கிவைக்கிறார்" என்றார்.