தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவிகள் கல்வி ஊக்கத்தொகைத் திட்டம் தொடக்கம்!
புதன், 16 ஜூலை 2008 (18:17 IST)
மாணவிகள் உயர்நிலை கல்வி கற்பதற்கு வழிவகுக்கும் வகையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்கி உள்ளது.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவித்த இத்திட்டத்தின்படி, அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவிகளின் பெயரில் ரூ.3,000 பணம் பொதுத் துறை வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ வைப்பு நிதியாக செலுத்தப்படும்.