அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மொத்தம் 1830 இடங்களும், பல் மருத்துவப் படிப்பிற்கு 868 இடங்களும் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்டார்.
அதன்பிறகு அவர் பேசுகையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் (புதிதாக வந்துள்ள தர்மபுரி கல்லூரி உள்பட) மொத்த இடங்கள் 1483. தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 560 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 347. ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்களும், 17 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 783 இடங்களும் உள்ளன.
ஆகமொத்தம் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1830-ம், பல் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 868ம் உள்ளன.
தரவரிசைப் பட்டியலில் 9 பேர் முதலிடம் பெற்றிருந்தாலும் கூட அவர்களுக்கு ரேண்டம் எண் தேவைப்படாது. மற்றவர்களுக்கு தேவைப்பட்டால் ரேண்டம் எண் முறை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.