சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பொது நிர்வாகவியல் (தமிழ் வழி) பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
இக்கல்வியாண்டில் முதுநிலை பொதுநிர்வாகவியல் பட்டப்படிப்பு அண்ணா பொதுவாழ்வியல் மையத்தில் தொடங்கப்படுகிறது. இப்படிப்பில் சேர விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பல்கலைக்கழகத்தில் பெற்று, ஜூன் 23-க்குள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.