தொலைதூரக் கல்வியில் ஐ.ஐ.டி.!

வியாழன், 8 மே 2008 (11:28 IST)
ஐ.ஐ.டி.க்குள் நுழைய முடியவில்லையா? மாணவர்கள் மனமுடைந்து விடவேண்டாம். தற்போது நீங்கள் தொலைதூரக் கல்வி வசதி மூலம் ஐ.ஐ.டி.யில் கலவி கற்கலாம்.

ஐ.ஐ.டி. உள்‌ளிட்ட முன்னணி தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் தற்போது தங்களது முதுகலைப் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் விரைவில் வழங்கவுள்ளது.

இதற்காக அயல் நாட்டு பல்கலைக் கழகங்கள் தொலைதூரக் கல்வியை எவ்வாறு நடத்துகின்றன என்பதை ஐ.ஐ.டி. ஆராய்ந்து வருகிறது.

இதற்கான மாதிரியை மத்‌திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ளது.

இதற்காக 7 ஐ.ஐ.டி. கூட்டிணைகிறது. பாடத் திட்ட அடிப்படையிலான இணையதள வகுப்புகள் மற்றும் வீடியோ ஆகியவற்றை ஒரு பரிசோதனை முயற்சியாக உருவாக்கியுள்ளது. இதற்காக 140 பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது இணையதளம் மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.

தொழில் நுட்பக் கல்வியில் டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் இந்த பாடத் திட்டங்களில் சேரலாம். மேலும் தொழில் நுட்ப இளங்கலை பல்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் தங்களது முதுகலை படிப்பை இதன் மூலம் தொடரலாம் என்று மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வித் திட்டங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி வரும் தொலை தூரக் கல்விக் குழு (டி.இ.சி.) இந்த தொலைதூரக் கல்வித் திட்டத்தையும் கட்டுப்படுத்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்