உலகப் புத்தக நாளை பிரிட்டிஷ் கவுன்சிலில் கொண்டாடுங்கள்!
வியாழன், 17 ஏப்ரல் 2008 (16:13 IST)
புத்தகங்களையும் படித்தலையும் கொண்டாட வேண்டும் என்ற யுனெஸ்கோ தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் 26 வரை புத்தகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள், புதிதாகப் பதிவு செய்துகொள்பவர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன் பரிசுகளையும் அள்ளிச் செல்லலாம்.
உறுப்பினர்களுக்குச் சிறப்புச் சலுகை: பிரிட்டிஷ் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி நடக்கும் நாட்களில் ரூ.300 மதிப்புள்ள இலவசப் புத்தகங்கள் வழங்கப்படும். பிரிட்டனில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள குழந்தைகள் புத்தகங்கள், நிர்வாகவியல், ஆங்கிலம், சமூக அறிவியல், பொறியியல், கணினி அறிவியல், புனைக்கதை உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்களில் இருந்து தங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யலாம்.
சிறப்புப் புத்தகம் / டி.வி.டி. : பல்வேறு வகையான பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் டி.வி.டி.க்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதிலிருந்து உறுப்பினர்கள் தங்களுக்குத் தேவையானதை முன்பதிவு செய்துகொள்ள முடிவும்.
இணைய தளப் போட்டி: நீங்கள் ஒரு சாதாரண வாசகராக இருந்தாலும், புத்தக் பிரியராக இருந்தாலும் ஏப்ரல் 23 முதல் 25 வரை எங்களின் இணைய தளப் போட்டியில் பங்கேற்றுப் பரிசுகளை வெல்லலாம். அதற்கான முகவரி லைப்ரரி.பிரிட்டிஷ்கவுன்சில்.ஒஆர்ஜி.இன் என்ற தளத்தில் பார்க்கவும்
எழுத்தாளர் உரை: உலகப் புத்தக நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புனைக்கதை எழுத்தாளர் டிம் முராரி உரையாற்றுகிறார்.
யூகியுங்கள் வெல்லுங்கள்: இவ்விழாவின் ஒரு பகுதியாக நடக்கவுள்ள 'யூகியுங்கள் வெல்லுங்கள்' போட்டியில் கலந்துகொண்டு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்.
நீங்கள் உறுப்பினர் இல்லையா? இன்றே பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு வாருங்கள், உங்களை உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளுங்கள். மாணவர்களுக்கு மிகச் சிறப்பான சலுகைகள் காத்திருக்கின்றன. உங்களின் தனித்திறனையும் பணித்திறனையும் மேம்படுத்திக் கொள்ளவும், இசை மற்றும் திரைப்படங்கள் மூலம் உங்களின் பொழுதைக் கழிக்கவும், வை-பை இணைப்பின் மூலம் இணையத்தில் பயணிக்கையில் ஒத்த எண்ணங்களைக் கொண்ட நண்பர்களைக் கண்டறிந்து அவர்களுடம் அளவளாவவும் அல்லது தீனிகளைக் கொறித்துக் கொண்டு அவர்களுடன் காஃபி அருந்தவும் பிரிட்டிஷ் கவுன்சில் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
மேலதிக விவரங்களுக்கு கீழ்காணும் வழிகளைப் பயன்படுத்தவும்:
1 பிரிட்டிஷ் கவுன்சில், 737, அண்ணா சாலை, சென்னை 600 002 என்ற முகவரிக்கு வாருங்கள்.
2 4205 0600 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.