பாரதியார் பல்கலை. தொலைநிலை கல்வி தேர்வு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க ஏ‌ப். 4 கடை‌சி நா‌ள்!

சனி, 15 மார்ச் 2008 (12:31 IST)
பாரதியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வுகள் மே 10ஆ‌மதே‌தி‌யில் இருந்து ஜூன் 7ஆ‌மதே‌தி‌க்கத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

இது குறித்து தொலைநிலைக் கல்வி இயக்குநர் என்.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், நடப்பு ஆண்டு ஜூனில் நடைபெறும் தொலைநிலைக் கல்வித் தேர்வுக்கு ஏப்ர‌ல் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து இளநிலை, முதுநிலைப் பட்டம், முதுநிலை பட்டயம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பி.எட், எம்.எட் படிப்புகளின் தேர்வுக்கான விண்ணப்பம், பூர்த்தி செய்வதற்கான அறிவுரை ஆகியன பல்கலை‌‌க்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதை பிரதி எடுத்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை தபாலில் பெற ரூ.10-க்கு ஸ்டாம்ப் ஒட்டிய தபால் உறையுடன் தேர்வாணையர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641 046 என்ற விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ர‌ல் 4ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். அபராதத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ர‌ல் 11ஆ‌ம் தே‌தி என தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்