என்.ஆர்.ஐ. வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை!

திங்கள், 3 மார்ச் 2008 (18:54 IST)
பூர்வீக இந்தியர்கள், அயல்நாடு வாழ் இந்தியர்கள் ஆகியவர்களது குழந்தைகளின் கல்விக்கு இந்திய அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.

வரும் 2008-09 ஆம் ஆண்டிற்குரிய கல்வியாண்டில் இந்தியாவில் பட்டப்படிப்பு, தனித்துவமிக்க படிப்பு, பொது படிப்புகள் ஆகிய படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு திட்டத்தின்படி கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உட்பட கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கட்டணங்களிலும் 75 விழுக்காடு கட்டணசசலுகை அளிக்கப்படுகிறது.

இவற்றிற்கு ஆகும் செலவு அல்லது 3,600 அமெரிக்க டாலர் இவற்றில் எது குறைவோ அதை இந்திய அரசு வழங்கும்.

இந்த சலுகையைப்பெற கோலாலம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் வரும் மே 18-ம் தேதி நடக்க உள்ள நுழைவுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவேண்டும்.

மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்விகளுக்கு இந்த உதவித்தொகை சலுகை பொரு‌ந்தாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்