ஆஸ்ட்ரேலியாவில் படிக்க ஆசையா?

வியாழன், 14 பிப்ரவரி 2008 (19:06 IST)
ஆஸ்ட்ரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கவுள்ளன. இதற்கான முகாம் வரும் 23-மதேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் தாஜ் கோரமண்டலில் மார்ச் 2-ம் தேதி இத்தேர்வு நடக்கிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி, சண்டிகர், அகமதாபாத், மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கமான கண்காட்சியை போன்று இந்நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடனான நேரடி கலந்துரையாடலில் ஆஸ்ட்ரேலியா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அதில் கல்வி வாய்ப்புகள், தகுதியான படிப்பு மற்றும் அதற்கான தகுதிகள் குறித்த விவாதிக்கப்படுகிறது, சில நேரங்களில் சேர்க்கைக்கான உத்தரவு கடிதம் உடனே வழங்கப்படும்.

இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்ட்ரேலியாவில் படிக்குமமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் ஆஸ்ட்ரேலிகல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டத்தை பெறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியால் பொதுவாக மாணவர்கள் அதிகளவில் செலவழிக்கும் விண்ணப்பக் கட்டணம் சேமிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க சென்னை ஐ.டி.பி., அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், அவற்றின் போதுமான நகல்களை கொண்டு வர வேண்டும்.

ஆஸ்ட்ரேலியாவில் மொத்தம் உள்ள 39 பல்கலைக்கழகங்களில் 12 உலகின் 200 சிறந்த பல்கலைகழகங்களில் இடம்பிடித்துள்ளன. அதேசமயம் பிரிட்டன், அமெரிக்காவை விட குறைவான கல்வி கட்டணம், செலவுகளே ஆகுமஎன்று ஐ.டி.பி., வெளியிட்டுள்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: www.idp.com/india

வெப்துனியாவைப் படிக்கவும்