வீடியோகான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தப்படும்

Webdunia

வெள்ளி, 20 ஜூலை 2007 (11:55 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்னும் ஓராண்டில் வீடியோகான்பரன்சிங் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட இருகிறது.

தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் வீடியோகான்பரன்சிங் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறையைக் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோகான்பரன்சிங் மூலம் மற்ற வகுப்பறைகளிலும் பார்க்கலாம். பாடம் சம்பந்தமாக மாணாக்கர்கள் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்.

உலக வங்கியின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப கல்வி தர மேம்பாடு என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை ஓராண்டில் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்